அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
டோலிவுட்டின் பிரபல நடிகர் அல்லு அர்ஜுன் S/O சத்யமூர்த்தி படத்தின் வெற்றிக்கு பின்னர் தற்போது இயக்குநர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கும் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் நடிகைகள் ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். ஜூலை மாதம் துவங்கிய இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுக்கும் வில்லனாக நடிக்கும் ஆதிக்கும் இடையேயான முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு சரைனொடு என பெயரிடப்படும் என கூறப்படுகின்றது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கின்றார். ஸ்டைல் நாயகனாக ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன் இப்படத்தில் அதிரடி நாயகனாக நடித்து வருகின்றார்.