தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ரானா டகுபதி பாகுபலி படத்தில் தனது மிரட்டலான வில்லன் நடிப்பின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்தார். பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகி வரும் ரானா தற்போது பெங்களூர் டேய்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகின்றார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பெங்களூர் டேய்ஸ் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகின்றது. இதில் ஆர்யா,பாபி சிம்ஹா,ரானா,ஸ்ரீதிவ்யா,பார்வதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிவிபி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. இப்படம் மட்டுமல்லாது பிவிபி நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்திலும் ரானா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்தில் இந்திய கப்பல் படை அதிகாரியாக ரானா நடிக்கவுள்ளார். படங்களில் பிசியாக நடித்து வரும் ரானா பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து மராத்தி வெற்றிப் படமான போஸ்ட்டர் பாய்ஸ் எனும் படத்தின் தெலுங்கு ரீமேக்கை தயாரிக்கின்றார்.