Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

'தனி ஒருவன்' ரீமேக்கில் சல்மான் கான்

31 ஆக, 2015 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Salman-Khan-in-Thani-Oruvan-remake

அண்ணன் ராஜா இயக்க தம்பி ரவி நடித்து கடந்த வெள்ளியன்று வெளியான 'தனி ஒருவன்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 20 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்திருக்கும் என்று சொல்லப்படுகிறது. ராஜா, ரவி இருவரும் இணைந்து இதுவரை ஆறு படங்களைக் கொடுத்துள்ளனர். அந்த ஆறு படங்களில் 'தனி ஒருவன்' படத்தைத் தவிர அனைத்துமே ரீமேக் படங்கள்தான். ராஜா முதன் முதலில் இயக்கிய தெலுங்குப் படமான 'அனுமான் ஜங்ஷன்' படம் கூட மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படம்தான். விஜய் நாயகனாக நடிக்க ராஜா இயக்கிய 'வேலாயுதம்' படமும் ரீமேக் படம்தான். ஆக, இதுவரை ராஜா இயக்கிய எட்டு படங்களில் ஏழு படங்கள் ரீமேக் படங்கள்தான்.


ஆனால், முதல் முறையாக ராஜா அவரே சொந்தமாகக் கதை எழுதி இயக்கி வெளிவந்துள்ள 'தனி ஒருவன்' படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய உரிமை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். தெலுங்கிலும், ஹிந்தியிலும் படத்தை வாங்க இப்போதே தயாரிப்பாளரைத் தொந்தரவு செய்து வருகிறார்களாம். ஹிந்தியில் நம்பர் 1 நடிகராக இருக்கும் சல்மான் கான் 'தனி ஒருவன்' படம் பற்றிக் கேள்விப்பட்டு இன்னும் சில நாட்களில் படத்தைப் பார்க்க உள்ளாராம். சமீப காலமாக சல்மான் கான் ரீமேக் படங்களில்தான் அதிகம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரீமேக் படங்களை இயக்கி செல்லமாக 'ரீமேக்' ராஜா என்று அழைக்கப்பட்டு வந்த ராஜா மோகன் ராஜா என்று பெயரை மாற்றிய நேரம் அவருடைய படத்தின் ரீமேக் உரிமைக்கும் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in