ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'பாகுபலி' திரைப்படம் ஏற்கெனவே உலக அளவில் வெளியாகிவிட்டதே, அது என்ன சர்வதேச வெளியீடு எனக் கேட்கிறீர்களா ?. தமிழ், தெலுங்கில் வெளியான 'பாகுபலி' திரைப்படம் சுமார் 2 மணி நேரம் 39 நிமிடங்கள் ஓடும் படமாக இருந்தது. ஆனால், சர்வதேச அளவில் திரைப்பட விழாக்களிலும், மற்ற உலக நாடுகளிலும் வெளியிடப்படும் போது அவ்வளவு நீளம் படம் இருந்தால் சுவாரசியம் குறைந்து விடும் என்பதற்காக படத்தின் நீளத்தைக் குறைத்துள்ளார்கள். சுமார் 23 நிமிடங்களுக்கான காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதைத்தான் புசான் நகரில் நடக்க உள்ள திரைப்பட விழாவிலும் மற்ற உலகப் பட விழாக்களிலும் திரையிட உள்ளார்கள்.
சர்வதேச ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் படத்தை மறுபடியும் எடிட் செய்திருக்கிறார்கள். “தி இன்கிரடிபிள் ஹல்க், கிளாஷ் ஆப் த டைட்டன்ஸ், டேக்கன் 2” உள்ளிட்ட பல படங்களுக்கு படத்தொகுப்பாளராக இருந்த வின்சென்ட் டபைல்லோன் 'பாகுபலி' படத்தின் சர்வதேசப் பதிப்பை எடிட் செய்து கொடுத்துள்ளார். இதற்காக அவர் சில மாதங்களுக்கு முன்பே ராஜமௌலி குழுவில் இணைந்துவிட்டார். புசான் திரைப்பட விழாவைத் தொடர்ந்து இதுவரை 'பாகுபலி' படம் வெளியிடப்படாத பல நாடுகளில் வெளியாகும் எனத் தெரிகிறது.