பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் நடிகர் விஜய், நடிகைகள் ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள புலி படம் அக்டோபரில் உலகம் முழுவதும் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளிவரும் இப்படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவரவுள்ளது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழில் வெளிவந்துள்ள இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்புடன் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான பாடல்கள் வெளியீட்டு விழாவை செப்டம்பர் 6 ஆம் தேதி பிரமாண்டமாக நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளும் தற்போது நடைபெறுவதாக கூறப்படுகின்றது. புலி படத்தின் தெலுங்கு உரிமையை எஸ்.வி.ஆர் மீடியா எனும் பிரபல தயாரிப்பு நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் சார்பில் புலி தெலுங்கு பதிப்பின் பாடல்கள் வெளியீட்டிற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுகின்றதாம்.இவ்விழாவில் விஜய்,ஸ்ருதிஹாசன்,ஹன்சிகா போன்ற படக்குழுவினருடன் டோலிவுட் பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.