தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நார்வேயில் தயாரிக்கப்பட்டு வெளியான தமிழ் படம் 9சி ஆஸ்லோ. தமிழ் கலாச்சாரத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம், நார்வேயில் வெளியானதை அடுத்து விரைவில் தமிழ்நாட்டிலும் ரிலீசாக உள்ளது. ஸ்டீபன் இயக்கியுள்ள இப்படத்துக்கு திரு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு, எடிட்டிங் செய்துள்ள துருபன் நார்வே தமிழ் பிக்சர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
இப்படம் குறித்து ஒளிப்பதிவாளரும், தயாரிப்பாளருமான துருவன் கூறுகையில், இந்த, 9சி ஆஸ்லோ படம் ஒரு வீட்டில் நடக்கும் சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் அங்கு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் 15 வயதுக்கு மேல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் நடிகர் நடிகைகளே நடித்துள்ளனர். இது நிஜம் கலந்த கற்பனை கதை. நார்வேயில் வாழும் தமிழ் தமிழர்கள் பற்றிய கதை. அந்த நாட்டு சட்டப்படி 18 வயதுக்குப்பிறகு பிள்ளைகள் அப்பா அம்மாவை விட்டு பிரிந்து வாழ வேண்டும். ஆனால், தமிழர்கள் தங்களது கடைசி காலம் வரை பிள்ளைகளோடு வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள். 18 வயது வரை தமிழ் கலாச்சாரத்துக்குள் வாழ்ந்த இளைஞர்கள் அதன்பிறகு நார்வே கலாச்சாரத்திற்குள் செல்லும்போது தமிழ் கலாச்சாரம் அவர்களை இழுக்கிறது. அதனால் நார்வே கலாச்சாரத்தை சந்திக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.
மேலும் எங்களைப்போன்று அந்த நாட்டில் குடியேறிய தமிழர்களால் நார்வேயின் கலாச்சாரத்துக்கு மாற இயலவில்லை. ஆக, தமிழ்-நார்வே என இரண்டு கலாச்சாரத்திற்கு நடுவே சிக்கி தமிழ் பிள்ளைகள் சந்திக்கும் போராட்டம்தான் இந்த படம். திரும்பினால் நாங்கள், பார்த்தால் அவர்கள் என இரண்டு கலாச்சாரத்திலும் நார்வே தமிழர்கள் வாழ்கிறார்கள். அதனால் எதிர்காலத்தில் தமிழ் சமூகம் எப்படி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சொல்வதுதான் இந்த 9சி ஆஸ்லோ படத்தின் கதை. இந்த படத்தில் பாடல், சண்டை இல்லை. ஆனால் கதையோடு கலந்த நகைச்சுவை இருக்கும் என்கிறார் துருபன்.