Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரமோற்சவம் படப்பிடிப்பில் சமந்தா

30 ஆக, 2015 - 12:17 IST
எழுத்தின் அளவு:
Samantha-in-Bramotsavam-team

தமிழ் திரை உலகில் நடிகையாக அறிமுகமான சமந்தாவை ஆரம்பத்தில் கோலிவுட் கைவிட்ட போது அவருக்கு சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது தெலுங்கு திரை உலகம். டோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் படங்களைக் கைப்பற்றி உச்ச நட்சத்திரமாக உயர்ந்த பின்னரே கோலிவுட் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் ஆதரவை சமந்தா பெற்றார். சமந்தா நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நாயகனாக நடிக்கவுள்ள பிரமோற்சவம் படத்தில் நாயகியாக நடிக்க சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். பிவிபி நிறுவனம் மற்றும் நடிகர் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றின் இணை தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்குகின்றார். இப்படத்தில் சமந்தாவுடன் காஜல் அகர்வால்,பிரனிதா ஆகியோரும் நடிக்கின்றனர். செப்டம்பர் 14 ஆம் தேதி துவங்கும் பிரமோற்சவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக காஜல் அகர்வால் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் நடிகை சமந்தா செப்டம்பர் 20 தேதி முதல் பிரமோற்சவம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in