Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி்க்கு வில்லன் : அர்னால்ட்டின் கனவு நிறைவேறுமா?

29 ஆக, 2015 - 17:42 IST
எழுத்தின் அளவு:
Arnold-Schwarzenegger-acts-villan-in-Rajini-movie

ஷங்கரின் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் விரைவில் உருவாக உள்ள எந்திரன் 2 படத்தில், வில்லன் கேரக்டரில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வோர்ஷனோகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


நடிகர் ரஜினிகாந்த், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், கபாலி படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு பிறகு, ஷங்கரின் இயக்கத்திலான "எந்திரன் -2" படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயின் கேரக்டரில் காத்ரீனா கைப்பும் நடிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.


எந்திரன் 2 படத்தில், முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது, பின், அஜித் அதிலிருந்து பின்வாங்கியதன் காரணத்தினால், ரஜினியே, அடுத்த பாகத்திலும் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.


எந்திரன் 2 படம், தமிழ், ஹிந்தி் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதால், வில்லன் கேரக்டரில் அமீர் கானை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டனர். கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டதால், அக்கேரக்டரில் நடிக்க அமீர் கானால் முடியவில்லை. பின் விக்ரமை படக்குழுவினர் அணுகினர். ( ஐ படத்திற்காக, 3 ஆண்டுகள் எப்படத்திலும் நடிக்காமல், முழுவதுமே விக்ரம் அர்ப்பணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது). பின் அம்முடிவும் கைவிடப்பட்டது.


இதனிடையே, எந்திரன் 2 படத்தில், வில்லன் கேரக்டரில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வோர்ஷனோகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வோர்ஷனோகர் கலந்துகொண்டிருந்தார். அப்போது அர்னால்ட், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், அது விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


எந்திரன் 2 படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பதன் மூலம் அர்னால்டின் கனவு நிறைவேறுமா அல்லது வேறு யாராவது நடிக்க இருக்கிறார்களா என்பதன் பதில் ஷங்கரின் கையிலேயே உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in