மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
இசை அமைப்பாளர் ஏ .ஆர்.ரகுமான், எஸ் டி ஆர்,கௌதம் வாசுதேவ மேனன் ஆகியோர் விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தங்களது வெற்றிப்பயணத்தை அச்சம் என்பது மடமையடா படம் மூலம் துவங்க உள்ளனர். இந்தப் படத்தின் டீசர் அடுத்தது என்ன ... என்ற ஆர்வத்தை ரசிகர்கள் இடையே வரவைக்கும்.எஸ் டி ஆரின் ஆளுமையும், ரகுமானின் மனத்தைக் கொஞ்சும் இசையும் நம் மனதில் என்றென்றும் ரீங்காரமிடும்.இன்றைக்கு வெளி ஆகும் டீசரில் இடம் பெற்று உள்ள பாடல், படத்தில் இடம்பெற்று உள்ள முத்தான ஆறு பாடல்களில் ஒன்று.இசைக்கும் பரபரப்பான ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் அச்சம் என்பது மடமையடா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிந்து, நவம்பர் மாதம் வெளிவர தயாராக இருக்கிறது.