600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் ராம் சரண் ஸ்டன்ட் கலைஞராக நடிக்கும் படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு தலைப்பு வைக்க ப்ரூஸ் லீ, ரீசவுன்ட்,மை நேம் இஸ் ராஜு போன்ற பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் நாயகனாக நடிக்கும் "ப்ரூஸ் லீ" படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாவதால், இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா, ராம் சரண் மற்றும் படக்குழுவினர் மத்தியில் குழுப்பத்தை ஏற்படுத்தியது. தற்போது ப்ரூஸ் லீ தி பைட்டர் என்ற தலைப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ப்ரூஸ் லீ தலைப்புடன் இப்படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் தன்னயா தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், ஈரோப் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்து வருகின்றார்.