இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட்டின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா இன்று(ஆகஸ்ட் 29) தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். இவரது பிறந்தநாளன்று நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக நடிக்கும் படத்தின் டீசர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று மாலை இப்படத்தின் டீசரை பிரபல ஹிந்தி நடிகர் சல்மான்கான் வெளியிடுவதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. நிதின் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் விவி விநாயக் இயக்குகின்றார். இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக சேஷா சைகள் நடித்துள்ளார்.மறைந்த மூத்த நடிகரும் அகிலின் தாத்தாவுமான நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ் அவர்களின் பிறந்த தினமான செப்படம்பர் 26 ஆம் தேதி அகில் நடித்துள்ள படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை அக்டோபர் 22 ஆம் தேதி விஜயதசமி அன்று திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.