தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் மஞ்சு விஷ்ணு நடிப்பில் தயாராகியுள்ள டைனமைட் திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது. தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த அரிமா நம்பி படம் தெலுங்கில் டைனமைட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.இப்படத்தை இயக்குநர் தேவ கட்டா இயக்கி வருகின்றார்.நடிகை பிரணிதா சுபாஸ் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். நடிகர் சக்ரவர்த்தி இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.நடிகர் மஞ்சு விஷ்ணு தனது 24 பிரேம்ஸ் பேக்டரி தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். அண்மையில் தணிக்கைக்கு அனுப்பப்பட்ட இப்படத்திற்கு தணிக்கைக் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இப்படம் அக்டோபர் 1 ஆம் தேதி திரையிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் மற்றும் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளன.