தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
விஜய் டிவி நிறுவனத்தைப்போலவே ஜீ தமிழ் டிவியும் மிகப்பெரிய நிறுவனம்தான். இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் இவர்களது சேனல்கள் வெவ்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. மேலும், ஜீ தமிழ் சேனல் உருவானபோது, விஜய் டிவியைதான் அவர்கள் டார்க்கெட்டாக வைத்து செயல்படத் தொடங்கினர். ஆரம்பத்தில் விஜய் டிவி எப்படி நிகழ்ச்சிகளை வழங்கினார்களோ அதே பாணியில்தான் ஜீ தமிழும் நிகழ்ச்சிகளை வழங்கி வந்தது. இதனால் விஜய் டிவி அதிர்ச்சியடைந்ததோடு, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளை தங்களது அது இது எது நிகழ்ச்சி மூலம் கலாய்க்கத் தொடங்கினர். அப்படித்தான் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை கிண்டல் செய்தனர். அந்த நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி சொல்லும் என்னம்மா இப்படி பண்றேங்களேம்மா என்ற வார்த்தையை வைத்தே அவர்கள் கிண்டல் செய்தனர். இதனால் ஜீ டிவியும், லட்சுமி ராமகிருஷ்ணனும் பலத்த அதிர்ச்சியடைந்தனர்.
விளைவு, இப்போது படிப்படியாக வளர்ந்து கொண்டிருக்கும் ஜீ தமிழ் டிவி, விஜய் டிவியின் அது இது எது போன்று ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதன்மூலம் அவர்களது நிகழ்ச்சிகளை நக்கல் நய்யாண்டி என்று பதிலடி கொடுக்க தயாராகிக்கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.