தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிம்பு-நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு படத்தை இயக்கி வந்த டைரக்டர் பாண்டிராஜ், அந்த படம் பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கிக்கொண்டதால், அதையடுத்து சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் ஹைக்கூ என்ற படத்தை இயக்கினார். பிந்துமாதவி லீடு ரோலில் நடித்த அந்த படத்தில் சூர்யா-அமலாபால் இருவரும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். இப்படமும் அவர் இதற்கு முன்பு இயக்கிய பசங்க, மெரினா படங்களைப்போன்று சிறுவர்களை மையப்படுத்திய படம் என்பதால், அதற்கு ஹைக்கூ என்று பெயர் வைத்திருந்தார். ஆனால் இப்போது படம் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், அந்த டைட்டிலுக்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்காது என்கிறார்களாம். அதனால் பல டைட்டில்களை பரிசீலனை செய்து வந்த பாண்டிராஜ், இப்போது ஹைக்கூ படத்துக்கு பசங்க-2 என்றே பெயர் வைத்து விட்டார்.