‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 27) ஸ்ரீமந்துடு படத்தில் நீளம் கருதி குறைக்கப்பட்ட இரண்டு காட்சிகள் இணைக்கப்பட்டு மீண்டும் அப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ள இப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ராஜ்ய சபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கருக்கு காட்ட படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். பொழுபோக்கு அம்சங்களுடன் கிராமங்களை தத்தெடுத்தல் தொடர்பான சமூக சிந்தனை கொண்ட இப்படம் அரசியல் பிரபலங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. தற்போது சச்சின் டெண்டுல்கருக்கும் இப்படம் இந்த வாரத்திற்குள் திரையிட்டுக் காட்டப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் நெல்லூரில் உள்ள புட்டம்ராஜு கன்திரிகா கிராமத்தை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.