‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
நம்மவர் படத்தில் அறிமுகமான கரண் அதன் பிறகு பல படங்களில் வில்லன், ஹீரோ என மாறி மாறி நடித்தார். திடீரென்று வாய்ப்புகள் நின்று விடவே அமைதியாகிவிட்டார். திடீரென்று பிரபு சாலமன் இயக்கிய கொக்கி படத்தின் மூலம் ஹீரோவாக வந்தார். அந்த படம் வெற்றி பெற்றது. அதன் பிறகு நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படமும் வெற்றிபெற ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார்.
தம்பி வெட்டோத்தி சுந்தரம், கந்தா படங்களுக்கு பிறகு கன்னியும் காதலும் செம காதல் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் முடிந்தும் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. அதன் தயாரிப்பாளரும், இயக்குனருமான வி.சி.வடிவுடையான் சவுகார்பேட்டை என்கிற பேய் படத்தை இயக்கச் சென்று விட்டார். கரண் தற்போது உச்சத்துல சிவா என்ற படத்தை தானே தயாரித்து நடிக்கிறார்.