Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கால்ஷீட் சொதப்பல் , கீர்த்தி சுரேஷ் அதிரடி நீக்கம்

28 ஆக, 2015 - 12:56 IST
எழுத்தின் அளவு:
Keerthi-Suresh-dropped-from-Kavalai-vendaam-movie

'யாமிருக்க பயமே' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் டீகே, தயாரிப்பு நிறுவனமான ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மீண்டும் இணைந்துள்ள படம் 'கவலை வேண்டாம்'. இந்தப் படத்தில் ஜீவா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. ஜீவா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க ஃபோட்டோ ஷுட்டும் நடைபெற்றது. அந்தப் புகைப்படங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டன. ஆனால், அந்த ஃபோட்டோ ஷுட்டுக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் , படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்திருக்கிறார். தயாரிப்பு நிறுவனமும் அவரிடம் தொடர்ந்து பேசியதில் கீர்த்தி சுரேஷ் பிடி கொடுக்காமல் பேசியிருக்கிறார்.


அறிமுகமான முதல் படம் வெளிவருவதற்குள்ளாகவே பல படங்களில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவர்தான் கீர்த்தி சுரேஷ். இவர் நடித்து முதலில் வெளிவந்த படமான 'இது என்ன மாயம்' படு தோல்விப் படமாக அமைந்துவிட்டது. அதனால் தற்போது அவரை ஒப்பந்தம் செய்ய வருபவர்களும் மிகவும் யோசிக்கிறார்களாம். இதனிடையே, 'கவலை வேண்டாம்' படத்திற்கு கால்ஷீட் தராமல் கீர்த்தி சுரேஷ் சொதப்பியதால் தயாரிப்பு நிறுவனம் அவரைப் படத்திலிருந்தே நீக்கி விட்டதாம். அவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம். கீர்த்தி சுரேஷ் நடித்து ஒரு படம் கூட வெளிவந்து இன்னும் வெற்றி பெறவில்லை, அதற்குள் இப்படியா என ஆச்சரியத்துடன் பார்க்கிறது தமிழ்த் திரையுலகம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in