‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இயக்குனர் ஷங்கர் தனது படங்களில் எப்படி பிரமாண்டத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கிறாரோ அதேபோன்று ஹீரோ, ஹீரோயினி விசயத்திலும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர். குறிப்பாக அவரது படங்களில் தென்னிந்திய நடிகைகளை விட இந்தி நடிகைகளே அதிகமாக நடித்துள்ளனர். அந்த வகையில், அவரது முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை மதுபாலா நடித்திருந்தார். அதையடுத்து இயக்கிய காதலனில் நக்மா, பின்னர் இந்தியனில் மனீஷா கொய்ராலா, ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யாராய், முதல்வனில் மனீஷா கொய்ராலா, பாய்ஸில் ஜெனிலியா, அந்நியனில் சதா, சிவாஜியில் ஸ்ரேயா, எந்திரனில் ஐஸ்வர்யாராய் இப்படி தான் இயக்கியதில் ஓரிரு படங்களை தவிர மற்ற எல்லா படங்களிலும் இந்தி நடிகைகளைத்தான் நடிக்க வைத்துள்ளார் ஷங்கர்.