ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கவுண்டமணி கலர்புல் நாயகனாக நடித்துள்ள படம் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது. இந்த படத்தில் அவர் படப்பிடிப்புகளுக்கு கேரவன் வாடகைக்கு விடும் உரிமையாளராக நடித்துள்ளார். அதோடு, பாடல் காட்சிகளில் இளவட்ட ஹீரோக்களுக்கு இணையான காஸ்டியூம் அணிந்து நடித்துள்ள அவர், நடனமும் ஆடியிருக்கிறார். அதோடு, சண்டை காட்சியிலும் நடித்துள்ளார் கவுண்டமணி. குறிப்பாக, நடனம், சண்டை காட்சிகளுக்கு அதிக டயம் எடுத்துக்கொள்ளாமல் இரண்டொரு நாட்களிலேயே முடித்து விட்டாராம் அவர்.
மேலும், இந்த படத்தில் ஷாஜகான் படத்தில் விஜய் காதலர்களை சேர்த்து வைப்பது போன்ற கவுண்டமணியும் காதலர்களை சேர்த்து வைப்பராகவும் நடித்துள்ளார். அதனால் அவர் பல பிரச்சினைகளிலும் சிக்கிக்கொள்வாராம். ஆனபோதும் அதை ஒரு சமூக சேவையாகவே நினைத்து செய்து வருவாராம் கவுண்டமணி. இந்த நிலையில்தான், அவரது மகளாக நடித்துள்ள மெட்ராஸ் ரித்விகா ஒருவனை காதலிப்பாராம். இந்த விசயம் அவரது காதுக்கு வந்தபோது அதற்கு சம்மதிக்க மாட்டாராம் கவுண்டர். காதலர்களை பிரிப்பதற்கான வேலைகளில் ஈடுபடுவாராம். இதையடுத்து அந்த காதலர்கள் அவரை எப்படி சம்மதிக்க வைக்கிறார்கள் என்பதை காமெடியாக சொல்லியிருக்கிறார்களாம்.