ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரபு தேவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரேம் சாய் இயக்கத்தில் கௌதம் மேனன் வழங்கும் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படப்பிடிப்பு முடிந்து வெளி வரும் தருவாயில் உள்ளது. முழுக்க முழுக்க நகைச்சுவை மற்றும் காதல் கலந்த ஜனரஞ்சகமான படமான இந்தப் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை யாமினி கௌதம் நடித்து உள்ளார்.அவர்களுக்குள் நடக்கும் ஒரு இனிமையான காதல் நாடகமும், அதற்கு இணையாக சந்தானமும் வி டி வி கணேஷ் போடும் ரகளையான நகைச்சுவையும் படத்துக்கு மிக சிறந்த பலமாகும். இந்த படத்தின் தெலுங்கு பதிப்பான கொரியர் பாய் கல்யான் படத்தின் இசை கடந்த வாரம் வெளி ஆகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அதை தொடர்ந்து தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தின் பாடல் ஒன்று இன்று வெளியாகிறது.
பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் இந்தப் படத்தை ரசிகர்கள் திரை அரங்கத்துக்கு மீண்டும் மீண்டும் வந்து படை எடுப்பார்கள் என உறுதியுடன் கூறினார் கௌதம் வாசுதேவ மேனன்.