ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி அவருடைய புதிய படத்தை இன்று துவக்கினார். என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய அகமது இந்தப் படத்தை இயக்குகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின், ஹன்சிகா இந்தப் படத்தில் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள். பிரகாஷ்ராஜ், விவேக் முதல் முறையாக உதயநிதியுடன் இணைகிறார்கள். அது மட்டுமல்ல தன்னுடைய ஆஸ்தான இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜை நீக்கி விட்டு சந்தோஷ் நாராயணனை இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக நியமித்திருக்கிறார் உதயநிதி.
உதயநிதி தற்போது காக்கி சட்டை படத்தை இயக்கிய துரைசெந்தில்குமாரின் கெத்து படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருடைய ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். சத்யராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இந்தப் படம் முடிவதற்குள்ளாகவே தன்னுடைய அடுத்த படத்தை உதயநிதி ஆரம்பித்துள்ளார். புதிய படத்திற்கான பாடல் பதிவும் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள அழகழகா அவள் தெரிவா... என்ற ஒரு பாடல் பதிவு செய்யப்பட்டதைப் பற்றி உதயநிதி அவருடைய பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு மாபெரும் வெற்றியை எதிர்நோக்கி உள்ளார் உதயநிதி.