Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ், சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து அனிருத் கூட்டணியில் சிம்பு!

26 ஆக, 2015 - 17:25 IST
எழுத்தின் அளவு:
Anirudh-scores-music-for-Simbu-movie

சிம்பு நடித்த மன்மதன், வல்லவன், வானம் என சில படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் ஷங்கர் ராஜா. இதில் மன்மதன் படத்தில் யுவனின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானது. அதனால் அடுத்தடுத்து தனது படங்களுக்கு அவரையே இசையமைக்க வைத்தார் சிம்பு. ஆனால், இது நம்ம ஆளு படத்துக்கு தனது தம்பி குறளரசனை இசையமைப்பாளராக அறிமுகம் செய்தார். அதனால் அடுத்தபடியாக தான் நடிக்கும் படங்களுக்கு குறளரசனுக்குத்தான் அவர் சிபாரிசு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனபோதும், குறளரசன் இசையமைத்த முதல்படமே இன்னும் வெளிவரமுடியாமல் தாமதமாகிக் கொண்டிருப்பதோடு, தனது மார்க்கெட் இன்னமும் சூடுபிடிக்காத நிலையில், மார்க்கெட்டில் பிசியாக இருக்கும் இசையமைப்பாளர்களுடன் தற்போதைக்கு கூட்டணி அமைப்பதுதான் தனக்கு நல்லது என்று நினைக்கும் சிம்பு, தம்பி பெயரை இப்போதைக்கு முன்வைக்கவில்லை.


மேலும், இப்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் படத்திற்கு மட்டுமே யுவன் இசையமைக்கிறார். மற்றபடி அச்சம் என்பது மடமையடா படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க, மெர்சல் மற்றும் வேட்டை மன்னன் படங்களுக்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபகாலமாக அனிருத்தின் இசைக்கு இளவட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால், அவர் தனது படத்தின் வெற்றிக்கு பெரிய பலமாக இருப்பார் என்று நினைக்கும் சிம்பு, அவரிடம் தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு கொடுப்பது போன்று சூப்பர் ஹிட் பாடல்களை எனது படங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளாராம். ஆக, சிம்பு எதிர்பார்ப்பது போன்று ஹிட் பாடல்களை அனிருத் கொடுத்து விட்டால், அதன்பிறகு அவரே சிம்புவின் ஆஸ்தான இசையமைப்பாளராகி விடுவார் என்று தெரிகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in