டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஆர்யா நடிக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தில் அனுஷ்கா குண்டு பெண்ணாக நடிப்பதுதான் இப்போது லேட்டஸ்ட் ஹாட் டாபிக். குண்டான பெண் தன் மனவலிமையால் எப்படி ஸ்லிம்மாகி காட்டுகிறார் என்பது கதை. குண்டாக இருக்கும்போது தன்னை வெறுத்து ஆர்யாவை எப்படி விரும்ப வைக்கிறார் என்பது கதை. இதில் குண்டாக இருக்கும் அனுஷ்கா படிப்படியாக ஒல்லியாக மாறும் காட்சிகள் இருக்கிறது.
ஆடை நிபுணர் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன்தான் அனுஷ்காக குண்டாக நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அண்மையில் அவர் கலந்து கொண்ட விழாக்களில் குண்டான தோற்றத்தில் கலந்து கொண்டு காட்சியளித்து அசத்தினார்.
படத்திற்காக அவர் 20 கிலோ எடை கூடியிருக்கிறார் அடிப்படையில் யோகா நிபுணரான அனுஷ்காவுக்கு உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும் கைவந்த கலை என்கிறார்கள். வழக்கமாக ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் யோகா செய்யும் அனுஷ்கா. அதை கடந்த 3 மாதமாக நிறுத்தினார். உடல் எடையை கூட்ட உதவும் அசைவ உணவுகள், சாக்லெட்டுகள், ஐஸ் க்ரீம்கள், நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டார். இப்பபடி சாப்பிடுவதில் கடோத்கஜனாக மாறியதில் 20 கிலோ எடை கூடியது. அதன் பிறகு கொஞ்சம் கனமான உடை. வட்டமான மூக்கு கண்ணாடி அணிந்து மேலும் குண்டான தோற்றத்துடன் நடித்தார்.