அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் |
மெட்ராஸ் படத்திற்கு முன்பே பாலாவின் பரதேசி உள்பட சில படங்களில் நடித்திருந்தவர் ரித்விகா. ஆனால் பரதேசி படத்தில்தான் அவர் கவனிக்கப்பட்டார். அதையடுத்து ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் ரித்விகா. வாழ்க்கையை வாழ்வியலாக சொன்ன அந்த படத்தில் இவரது நடிப்பும் இயல்பாக இருந்தது. குறிப்பாக, கலையரசன்-ரித்விகா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் பேசப்பட்டது.
விளைவு, மதயானைக்கூட்டம் படத்திற்கு பிறகு மெட்ராஸ் படத்தில் பேசப்பட்டு இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் கலையரசன். அதேபோல் பரதேசிக்குப்பிறகு மெட்ராஸ் படத்தில் பேசப்படும் நடிகையான ரித்விகாவும் கைவசம் சில படங்களை வைத்திருக்கிறார். என்றாலும், அவர் எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை. குணசித்ர வேடங்களில்தான் நடித்து வருகிறார். அதோடு, கதாநாயகியாக நடிக்க சில படங்கள் அவரை தேடிச்சென்றபோது அவற்றை திருப்பி அனுப்பி விட்டாராம் ரித்விகா.