நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
கபாலி படத்தி்ல், ரஜினிகாந்த், சால்ட் அண்ட் பெப்பர் லுக்குடனும், அடர்ந்த வெள்ளை தாடியுடன் வலம் வர உள்ளார்.
அட்டகத்தி, மெட்ராஸ் படங்களின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், ரஜினி நடிப்பில், "கபாலி" படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்க உள்ளது.
இந்த படத்திற்கான போட்டோ ஷூட், சமீபத்தில் நடைபெற்றது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெகுவிரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படத்தில், ரஜினியின் புதிய லுக் குறித்த போட்டோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.
ரஜினி இப்படத்தில், சென்னை தாதாவாக நடிக்க உள்ளார். இந்த படத்தில், ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் நடிக்க உள்ளனர். இவர்களோடு, கலையரசன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு, மலேசியாவில் விரைவில் துவங்க உள்ளது.