இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கடந்த பல மாதங்களாக தமிழ்த் திரையுலகில் 'பேய்' சீசன்தான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. ஜுலை மாதம் வெளிவந்த 'பேபி, ஆவி குமார்' படங்கள் வரை பேய் சீசன் தொடர்ந்தது. இந்த மாதத்தில்தான் 'பேய்' படங்களுக்கு நம்மவர்கள் கொஞ்சம் ஓய்வு கொடுத்தது போல் தெரிந்தது. ஆனால், அடுத்த மாதம் மீண்டும் பேயின் அட்டகாசம் ஆரம்பம் என்று தாராளமாக விளம்பரம் கொடுக்கும் வகையில் சில பேய்ப் படங்கள் வர இருக்கின்றன. அவற்றில் நயன்தாரா நடித்துள்ள 'மாயா' படத்தையும், பா.விஜய் இயக்கி நாயகனாக நடித்துள்ள 'ஸ்ட்ராபெரி' படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லாம். இரண்டு படங்களையும் பேய் படங்களின் ஆஸ்தான வெளியீட்டு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிட உள்ளது.