ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டின் பிரபல கதாசிரியரும் இயக்குநருமான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் பல வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். அண்மையில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த S/O சத்யமூர்த்தி படத்தை இயக்கி வெற்றி கண்ட திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் தனது அடுத்த படத்தின் திரைக்கதை அமைப்பதில் பிசியாக உள்ளார். இப்படத்தின் திரைக்கதையை டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாணிற்காக திரிவிக்ரம் எழுதுகின்றாராம். பவன் கல்யாண் - திரிவிக்ரம் கூட்டணியில் உருவான ஜல்சா அதரிண்டிகி தரேதி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகும். அந்த வரிசையில் அடுத்த படத்தை உருவாக்க திரிவிக்ரம் ஈடுபட்டுள்ளார். இப்படத்தை கோபாலா கோபாலா படத்தை இயக்கிய கிஷோர் இயக்கவுள்ளார். திரிவிக்ரமுடன் இணைந்து கிஷோரும் இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளை கவனித்து வருகின்றாராம். பவன் கல்யாண் தற்போது நடித்து வரும் சர்தார் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் இப்படத்தில் அவர் நடிப்பார் என கூறப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது