மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் புலி. இந்த படத்தில் டீசர், டிரெய்லர், ஆடியோ என வெளியாகியுள்ள நிலையில், மூன்று மில்லியன் வியூவர்ஸ் டிரெய்லரை பார்த்து ரசித்திருப்பதோடு, 70 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இந்நிலையில், படம் செப்டம்பர் 17-ந்தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தியேட்டர்களுக்கு வரும் என்று இதுவரை செய்திகள் வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் புலியை வரவேற்க விஜய்யின் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்திருந்தனர்.
ஆனால், நேற்று அப்படத்தை தயாரித்துள்ள எஸ்கேடி ஸ்டுடியோஸ் அக்டோபர் 1-ந்தேதி புலி தியேட்டர்களுக்கு வருவதாக டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த தேதி மாற்றத்திற்கு என்ன காரணம்? என்று புலி பட வட்டாரத்தை விசாரித்தபோது, படத்தின் அனிமேஷன் வேலைகள் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனபோதும் செப்டம்பர் 17-ந்தேதிக்கு வேலைகள் முடிந்து விடுவதற்கான சூழலே உள்ளது. என்றாலும், அந்த தேதியை விட அக்டோபர் 1-ந்தேதி வியாழக்கிழமை படம் வெளியானால், அதன்பிறகு அக்டோபர் 2-ந்தேதி காந்தி ஜெயந்தி, சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்கள் வரிசையாக இருப்பதால் படத்திற்கு நல்லதொரு ஓப்பனிங் கிடைக்கும் என்பதினால்தான் இந்த தேதி மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள்.