டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறதோ இல்லையோ, தமிழ்சினிமாவின் ஹீரோக்கள் பிஸியாக இருக்கிறார்கள். தற்போதைய நிலவரத்தை வைத்துப் பார்த்தால் இப்படித்தான் சொல்ல வேண்டும். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, தனுஷ், விஷால், ஆர்யா, சிம்பு, கார்த்தி என அனைத்து முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களும் தற்போது பரபரப்பாக தயாராகி வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலை முன் எப்போதும் இல்லை என்கிற அளவுக்கு, ரஜினியின் 'கபாலி' பட வேலைகள் தொடங்கியுள்ள அதே நேரம், கமல் நடித்த 'தூங்காவனம்' போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் நடக்கின்றன.
புலி படத்தில் நடித்து முடித்துவிட்ட விஜய், அட்லீ இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கும் தல 56 படத்தில் அஜித் பிஸியாக உள்ளார்.
சூர்யா '24' படத்தில் பிஸியாக இருக்க, அவரது தம்பி கார்த்தி காஸ்மோரா படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் '10 எண்றதுக்குள்ள' படத்தில் நடித்து வருகிறார்.