‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
'மாரி' படம் கமர்ஷியல் ஹிட் இல்லை. அதே நேரம் போட்ட முதலுக்கு மோசமில்லை என்கிற அளவுக்கு ஓடியது. மாரிக்கு முந்தைய படமான அனேகன் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. தோல்விப்படம். ஆனாலும் தனுஷ் மார்கெட்டுக்கு எந்த பழுதும் இல்லை. தற்போது 3 படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் தனுஷ் என்பதே இதற்கு சாட்சி. அவற்றில், வேல்ராஜ் இயக்கத்தில் உருவாகும் விஐபி 2 என சொல்லப்படும் படம் எறக்குறைய முடிவடையும்நிலையில் உள்ளது.
இப்படத்தில் எமி ஜாக்ஸனும், சமந்தாவும் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அடுத்து... சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம். ஓடும் ரயிலில் சப்ளையராக பணியாற்றுபவராக தனுஷ் நடிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இப்படத்திற்காக மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் ரயில்பெட்டிகள், பிளாட்பாரம் செட் போடப்பட்டு தற்போது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.