ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தாமிரபரணி படம் மூலம் தமிழ்சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் பானு.. மலையாளத்தில் இவருக்கு முக்தா பானு என பெயர் இருந்தாலும் தமிழில் 'தாமிரபரணி பானு' என்றே பெயர் நிலைத்துவிட்டது.. இவருக்கு வரும் ஆகஸ்ட்-30ல் திருமணம் நடைபெறவுள்ளது. மலையாள சினிமாவில் பாடகியும், சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருபவருமான ரிமி டாமியின் சகோதரர் ரிங்கு டாமி தான் பானுவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன். இருவீட்டார் சம்மதத்துடன் கூடிய காதல் திருமணம் இது. நேற்று இவரது நிச்சயதார்த்தம் கேரளாவில் ரொம்பவும் ஆடம்பரம் இல்லாமல் அதேசமயம் நேர்த்தியாக நடைபெற்றது. பானுவின் நிச்சயதார்த்த விழாவில் சினிமா பிரபலங்கள் யாரும் அவ்வளவாக காணப்படவில்லை. இந்த விழாவில் நடிகர் சுரேஷ்கோபி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். வரும் ஆகஸ்ட்-30ஆம் தேதி இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. பானு நிறைய தமிழ்ப்படங்களில் நடித்துள்ளதால், திருமண நிகழ்வன்று பல தமிழ் நட்சத்திரங்களும் அன்றைய தினம் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.