ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் ராம் சரண் தனது தந்தையும் டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவியின் பிறந்தநாள் விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் வேலைகளை கவனித்து வந்தார். சிரஞ்சீவியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து விட்டதால் இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் படப்பிடிப்பில் ராம் சரண் இணைந்துள்ளார். ஆக்ஷன் திரைப்படமான இப்படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்குகின்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார். ஆகஸ்ட் 22 ஆம் தேதி சிரஞ்சீவியின் பிறந்தநாள் அன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ராம் சரண் நடிப்பில் 9வது படமாக உருவாகும் இப்படத்திற்கு ப்ரூஸ் லீ மற்றும் ரீசௌண்ட் என பெயரிட படக்குழுவினர் பரீசிலனை செய்து வருகின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார்.