இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் நடிகை தமன்னாவின் மார்கெட் சரிந்து வந்த நிலையில் வெளிவந்த பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றி தமன்னாவிற்கு புதிய தெம்பைக் கொடுத்துள்ளது. பாகுபலி படத்தில் பாடலுக்கு மட்டும் பயன்படும் நாயகி போன்று இல்லாமல் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த தமன்னாவிற்கு பாராட்டுக்களைப் போல் பட வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகும் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வரும் தமன்னாவிற்கு டோலிவுட் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் வந்துள்ளன. இந்நிலையில் நடிகை தமன்னா டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் 150வது படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா,அனுஷ்கா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. நடிகை தமன்னாவும் இந்த நாயகிகளின் பட்டியலில் தனது பெயரை இணைத்துக் கொள்ள விரும்புகின்றார். தமன்னாவின் கனவு பலிக்குமா!