சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
சிங் இஸ் பிலிங் படத்தில், இயக்குநர் பிரபுதேவா சிறப்பான பணியை மேற்கொண்டிருப்பதாக, அப்படத்தின் ஹீரோ அக்ஷய் குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அக்ஷய் குமார் கூறியதாவது, படத்தை இந்த மொழியை சேர்ந்தவர்கள் இயக்க வேண்டும் என்பது தேவையில்லை. நாட்டில் உள்ள அனைத்து மதத்தினருக்கும், அனைத்து வகையான உரிமைகளும் உள்ளது. படத்தின் இயக்கத்திற்கு, மதம் எப்போதும் தடையாக இருந்ததில்லை, இருக்கவும் போவதில்லை. சர்தார் வாழ்க்கை தொடர்பான சிங் இஸ் கிங் படத்தை இயக்கியவர் அனீஸ் பஜ்மீ என்ற இஸ்லாமியர். அதேபோன்று, தற்போது சீக்கியரான நான் நடித்துள்ள சிங் இஸ் பிலிங் படத்தை இயக்கியுள்ளவர் பிரபுதேவா என்ற ஹிந்து. சர்தார் குறித்த படத்தை, பஞ்சாபிகாரர் இயக்கவேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை. சிங் இஸ் பிலிங் படத்தில், பிரபுதேவா சிறப்பான பணியை செய்துள்ளார் என்று அக்ஷய் குமார் கூறியுள்ளார்.