இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிரஞ்சீவியின் 60வது பிறந்த நாள் விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் சிரஞ்சீவியின் குடும்பத்தினர் உட்பட தெலுங்குத் திரையுலகப் பிரபலங்களும், தமிழ், ஹிந்தி, கன்னடத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஸ்ரீதேவி அவருடைய கணவர் போனிகபூர், சத்ருக்கன் சின்ஹா, கமல்ஹாசன் மற்றும் கௌதமி, அபிஷேக் பச்சன் அவருடைய அம்மா ஜெயா பச்சன், ஜெயப்பிரதா, ஜெயசுதா, சூர்யா, குஷ்பு, சுஹாசினி, லிசி, தபு, டாப்சீ, ஸ்ரேயா, த்ரிஷா, பிரணீதா, அம்பிகா, ராதா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அவர் 'கபாலி' படத்தின் புகைப்பட ஷுட்டில் பிசியாக இருப்பதால் கலந்து கொள்ளவில்லை என்று சொல்லப்பட்டது. அதே சமயம் சென்னையில் நடைபெற்ற பாக்யராஜ், பூர்ணிமா மகன் சாந்தனு திருமண வரவேற்பில் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.