தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் சர்தார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கக் கூடும் என கூறப்பட்டது. காஜல் அகர்வால் சர்தார் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. நார்த் ஸ்டார் எண்டர்டையின்மெண்ட் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் பாபி இயக்குகின்றார். இப்படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிகை அனிஷா அம்ரோஸ் நடிப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அனிஷா இப்படத்திலிருந்து விலகிக் கொண்டார். இந்நிலையில் தற்போது நடிகை காஜல் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புனேவில் துவங்கிய இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் மாத முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.. இதில் காஜல் அகர்வால் கலந்து கொள்ளவுள்ளார்.இப்படம் தவிர நடிகர் மகேஷ் பாபு நடிக்கும் பிரமோற்சவம் படத்திலும் காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்