வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ரஜினி, டான் வேடத்தில் நடிக்கும் படத்தை இயக்கும், மெட்ராஸ் பட ரஞ்சித், ஸ்கிரிப்ட் ஒர்க், லோகேஷன் வேலைகளை முடித்து விட்டபோதும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேடுவதில் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஏற்கனவே, தன் முதல் படத்தில் நடித்த அட்டகத்தி ரஞ்சித், இரண்டாவது படமான மெட்ராஸில் நடித்த கலையரசன் ஆகியோருக்கு அப்படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளவர், நாயகியாக, தோனி படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து, டான் வேடத்தில் நடிக்கும் வயதான ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, விருது பெற்ற திறமையான நடிகையை தேடி வருகிறார். காரணம், கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால், அழுத்தமான பர்பார்மென்ஸ் கொடுக்க வேண்டும். அதனால், இந்தியாவிலுள்ள விருது பெற்ற சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் இயக்குனர் ரஞ்சித்.