ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பீகே படத்தை தொடர்ந்து, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீ்ர் கான், டங்கால் படத்தில் நடிக்க உள்ளார். மல்யுத்த வீரர் கேரக்டரில் அமீர் கான் நடிக்க உள்ளதை தொடர்ந்து, உடல் எடையை அதிகரித்துள்ளதோடு மட்டுமல்லாது, தனது லுக்கையும் மாற்றியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, செப்டம்பர் முதல் தேதி துவங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில், படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடைபெற உள்ளது. ஆண்டுதோறும், ரூரல் ஒலிம்பிக்ஸ் நடைபெறும், பஞ்சாப் மாநிலத்தின் கிழ ராய்ப்பூரில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இப்பகுதியில் நடைபெறும் முதல் படப்பிடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. படம், 2016ம் ஆண்டு பிற்பகுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.