நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமான ரசாயனபொருள் பயன்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு நாடு முழுவதும் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டது. அந்த மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் அமிதாப் நடித்திருந்தார்.
தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கு.மணவாளன் மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேகி விளம்பரத்தில் நடித்த அமிதாப், மாதுரி தீட்சித், ப்ரீத்தி ஜிந்தா ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமிதாப் சார்பில் ஆஜரான வழக்கிறஞர் அபிதாப் பச்சன் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்தார் அதில் "நான் மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் 2012ம் ஆண்டு ஜுன் 5ந் தேதி முதல், 2013ம் ஆண்டு செப்டம்பர் 5ந் தேதி வரை நடித்தேன். அந்த காலகட்டங்களில் மேகி நூடுல்ஸ் மீது எந்த புகாரும் வரவில்லை. மனுதாரார் தேவையில்லாமல் என் பெயரை இந்த வழக்கில் சேர்த்துள்ளார். எனனே என்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும்" என்று அந்த மனுவில் அமிதாப் கூறியிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் விசாரணையை அடுத்து மாதம் 9ந் தேதிக்கு தள்ளி வைத்தது.