Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜிப்பா ஜிமிக்கி படம் மூலம் தமிழுக்கு வந்த இன்னொரு குஷ்பு!

22 ஆக, 2015 - 11:19 IST
எழுத்தின் அளவு:
Another-Kushboo-for-Tamil-cinema

3 ப்ரண்ட்ஸ் இண்டர்நேசனல் சார்பில் திவாகர் தயாரித்துள்ள படம் ஜிப்பா ஜிமிக்கி. ரா.ராஜசேகர் என்பவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் கிரிஷ் திவாகர், குஷ்பு பிரசாத், நான்கடவுள் ராஜேந்திரன், ஆடுகளம் நரேன், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்ராஜ் பாடல்கள் எழுதியுள்ள இப்படத்துக்கு ரனிப் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.


அப்போது படம் குறித்து இயக்குனர் ரா.ராஜசேகர் கூறும்போது, இந்த படத்தின் தயாரிப்பாளர் கர்நாடகத்தை சேர்ந்தவர். அங்கு சில படங்களை ஏற்கனவே தயாரித்துள்ளார். ஆனபோதும், தனது மகன் கிரிஷை தமிழில்தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று தமிழ் படமெடுத்துள்ளார். இதில் கிரிஷ்க்கு ஜோடியாக குஷ்பு என்றொரு பெங்காளி நடிகையை அறிமுகம் செய்திருக்கிறோம். அவருக்கு சுத்தமாக தமிழை தெரியாது என்றபோதும், காட்சிகளுக்கேற்ப நல்ல பர்பாமென்ஸ் கொடுத்துள்ளார். இவரை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக குஷ்பு என்று பெயர் வைக்கவில்லை. இவரது நிஜ பெயரே குஷ்புதான்.


மேலும், இந்த படம் முழுக்க முழுக்க கர்நாடகத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது. வழக்கமான காதல்தான் என்றாலும் அதை புதுமையான முறையில் படமாக்கியிருக்கிறேன். மேலும், சின்ன வயதிலேயே பெற்றோரால் திருமண ஒப்பந்தம் போடப்பட்ட ஒரு பையனும் -பெண்ணும், எப்படியேனும் பிரிந்து விட வேண்டும் என்பதற்காகவே இணைகிறார்கள். ஆனால் பின்னர் அவர்களால் பிரியமுடியாதநிலை ஏற்பட்டு விடுகிறது. இதை சுவராஸ்யமாக, நல்ல லவ் பீலுடன் கதை பண்ணியிருக்கிறேன்.


மேலும், படத்தின் டைட்டீல் கேட்சிங்காக இருக்க வேண்டும் என்பதற்காக, ஆண்கள் அணியும் ஜிப்பா, பெண்கள் காதில் அணியும் ஜிமிக்கி இரண்டையும் இணைத்து ஜிப்பா ஜிமிக்கி என்று பெயர் வைத்திருக்கிறேன். இந்த படத்திற்கு என்னைவிட கேமராமேன் சரவண நடராஜன், இசையமைப்பாளர் ரனிப், பாடலாசிரியர் மோகன்ராஜ் ஆகியோர் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இப்படி பலரது கூட்டு முயற்சியினால் ஜிப்பா ஜிமிக்கு படம் சிறப்பாக வந்திருக்கிறது என்றார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in