ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சென்னை:நடிகர் சாந்தனு - கீர்த்தி திருமணம், சென்னையில் நேற்று நடந்தது; திரையுலகத்தினர் நேரில் வாழ்த்தினர். சினிமா இயக்குனரும், நடிகருமான, கே.பாக்யராஜ் - பூர்ணிமா மகன்
சாந்தனு. இவருக்கும், 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்திக்கும், சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, கேரள இல்லத்தில், நேற்று காலை, 10:00 மணிக்கு திருமணம் நடந்தது.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள், நடிகையர், இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன் மற்றும், 'டிவி' நடிகர், நடிகையர், நடன இயக்குனர்கள் நேரில் வாழ்த்தினர்.திருமண வரவேற்பு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில், இன்று மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.