பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கிய முதல் படம் - வணக்கம் சென்னை. மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்த இந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் அடுத்தப்படத்தை கமர்ஷியல் ஹிட்டாக்க வேண்டும் என்று எண்ணிய கிருத்திகா, அதற்கு சிம்புதான் பொருத்தமாக இருப்பார் என்ற எண்ணத்தில் சிம்புவிடம் கால்ஷீட் கேட்டிருந்தார். கிருத்திகாவிடம் கதை கேட்காமல் சம்பளம் பேசாமல் கிருத்திகாவின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்தார் சிம்பு.
இதுகுறித்து பல மாதங்களுக்கு முன்பே செய்திகள் வந்தன. சிம்புவின் கால்ஷீட் கிடைத்ததும் ஸ்கிரிப்ட் வேலையில் இறங்கிவிட்ட கிருத்திகா தற்போது, தான் இயக்கும் படத்திற்கான ப்ரீ புரடக்ஷன் வேலையில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் கிருத்திகாவின் படத்தில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம் சிம்பு.