ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சயீப் அலி கான், காத்ரீனா கைப் நடித்துள்ள படம் பான்டோம் . கபீர்கான் இயக்கி உள்ளார். இந்தப் படம் வருகிற 28ந் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தப் படம் 2008ம் ஆண்டு மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை பாகிஸ்தானில் திரையிடக்கூடாது என்று மும்பை தாக்குதலில் தொடர்புடையவராக கருதப்படும் ஜமாத் உத்தவா தலைவர் ஹபீஸ் சயீத் லாகூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் "தன்னையும், தன் இயக்கத்தையும் பான்டோம் படம் தவறாக சித்தரிப்பதாகவும், இதனால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அதனால் படத்தை தடைசெய்ய வேண்டும்" என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.