தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கயல் நடிகை மாநிறம் என்றாலும் நல்ல கலையாகத்தான் இருப்பார். அந்த ஒரே காரணத்திற்காகத்தான் அவரை கயல் படத்திலேயே அந்த டைரக்டர் நடிக்க வைத்தார். ஆனால் கடைசியாக நடிகை நடித்து வெளியான படத்தின் டைரக்டர், சுமாரான பெண் தேவைப்பட்டது அதனால்தான் இவரை புக் பண்ணினேன் என்று நடிகை எதிரிலேயே ஒருநாள் கூறி விட்டாராம்.
அதைக்கேட்டு அப்போதைக்கு அம்மணி சிரித்துக்கொண்டாலும், வீட்டிற்கு சென்ற பிறகு குப்புற படுத்து சதா அழுது கொண்டேயிருந்தாராம். அவரை சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம். அதனால் இப்போது அந்த டைரக்டரை எதிரி போன்று பார்க்கும் நடிகை, தனது கலரை பளிச்சென்று காட்டும் வண்ணம் கொண்ட ஆடைகளை அணிந்தபடியே வெளியில் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறார்.