தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
திருமண நிகழ்ச்சி என்பது எல்லோர் வாழ்விலும் ஒரு இன்றியமையாததாக மாறியுள்ள நிலையில், திருமணத்திற்கு ஏற்ற சரியான வயது 32 தான் என்று, பாலிவுட் இளம் நடிகை அலியா பட் கூறியுள்ளார்.
அலியா பட்டின் நண்பர் அனுஷ்கா ரஞ்சனின் அறிமுக படமான வெட்டிங் புலாவ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில், நடிகை அலியா பட் கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அலியா பட் பேசியதாவது, எனக்கு தற்போது 22 வயது ஆகிறது. என்னைப் பொறுத்தவரையில், வெட்டிங் புலாவ் சாப்பிடுவதற்கான சரியான வயது 32 தான் ஆகும். எனக்கு தற்போதுவரைக்கும், திருமணத்திற்கான லட்டு சாப்பிட விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தனக்கு கணவராக வர இருப்பவர், மிகுந்த நகைச்சுவை தன்மையுடனும், சிறந்த தோற்றத்துடனும் இருக்க வேண்டும். என்மீது அவர் வைத்துள்ள அன்பின் காரணமாகவே, அவர் தன்னை இம்பிரஸ் பண்ணியிருக்க வேண்டும் என்று அலியா பட் மேலும் கூறினார்.