பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஜெயம் ரவி நடிக்கும் படங்கள் சில நேரங்களில் தயாரிப்பாளர்களிடம் சிக்கி மாட்டிக் கொண்டு தவிக்க நேரிடுகிறது. ஏற்கெனவே, 'பூலோகம்' படம் முடிந்து மாதக் கணக்காகியும் அந்தப் படம் இன்னும் வெளிவராமலே இருக்கிறது. எப்போது வரும் என்று தயாரிப்பாளர் இதுவரை அறிவிக்காமலே இருக்கிறார். கடந்த வருடம் செப்டம்பர் மாதமே அந்தப் படம் வரும் என்று அறிவிக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் இந்த வருட செப்டம்பர் மாதமே வந்துவிடும்.
இப்போது ஜெயம் ரவி நடித்துள்ள 'தனி ஒருவன்' படத்திற்கும் பெரிதாக எந்த பிரமோஷனையும் செய்யாமல் தயாரிப்பாளர் தவிக்க விடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை 'தனி ஒருவன்' படத்திற்காக எந்த விதமான பத்திரிகையாளர் சந்திப்பும், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடைபெறவில்லை. இசை வெளியீட்டைக் கூட ஒரு எஃப்எம் வானொலி நிலையத்தில் சிம்பிளாக நடத்தி முடித்து விட்டனர்.