ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை குஷ்புவின் தம்பி அப்துல்லா தற்போது மாய மோகினி என்றொரு படத்தில் நடித்து வருகிறார். ஹாரர் கதையில் உருவாகும் இந்த படத்தை ராஜா விக்ரம் இயக்குகிறார். கே.ஆர்.விஜயா, சாரிகா, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கே.ஆர்.விஜயா பெண் சித்தராக நடிக்கும் இப்படம் மறுஜென்ம கதையில் உருவாகிறது. அதனால் நாயகன் அப்துல்லா, இமான் அண்ணாச்சி இருவரும் இரட்டை வேடங்களில் நடிக்கின்றனர். சாரிகா மோகினி வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் சித்தர் வேடத்தில் நடித்துள்ள கே.ஆர்.விஜயா, மோகினியை பெண்ணின் உடம்பில் இருந்து வெளியேற்றும் ஒரு பாடல் காட்சியில் மிக ஆவேசமாக நடித்திருக்கிறாராம். அவரது உடம்பில் முதிர்ச்சி தென்பட்டாலும் நடிப்பில் எந்தவித முதிர்ச்சியும் இல்லாமல் கதாபாத்திரத்திற்கு தேவையான வேகம் காட்டி நடித்துள்ளாராம்.