Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அன்வர் ரஷீத் டைரக்சனில் நடிக்கும் பஹத் பாசில்- நஸ்ரியா ஜோடி..!

19 ஆக, 2015 - 17:47 IST
எழுத்தின் அளவு:
Fahad-Fazil-romance-with-Nazriya-in-Anwar-rasheed-direction

மலையாள சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க இயக்குனர் அன்வர் ரஷீத்.. ஒரு தயாரிப்பாளராகவும் மாறி சொல்லி அடிக்கும் கில்லியாக படங்களை தயாரித்து வருகிறார். சொல்லப்போனால் 2012ல் துல்கரை வைத்து இயக்கிய 'உஸ்தாத் ஹோட்டல்' படத்திற்கு பிறகு இவருக்கு படம் இயக்கவே நேரமில்லை.. இவர் தயாரிப்பில் வெளியான 'பெங்களூர் டேய்ஸ்' மற்றும் சமீபத்தில் வெளியான 'பிரமேம்' படங்களின் அதிரிபுதிரி ஹிட்டால் வசூலை எண்ணவே நேரமில்லாத இவர், தற்போது சிரமப்பட்டு நேரத்தை ஒதுக்கி மூன்று வருடத்திற்கு பிறகு தனது அடுத்த படத்தை இயக்க தயாராகியுள்ளார்..


இந்தப்படத்தில் பஹத் பாசில் - நஸ்ரியாதான் ஜோடி. இவர் இதுவரை நஸ்ரியாவையோ, பஹத் பாசிலையோ வைத்து படம் இயக்கியதில்லை. ஆனால் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் பூப்பூக்க வைத்து, அதை திருமணத்தில் கொண்டுபோய் நிறுத்தியது இவர் தயாரித்த 'பெங்களூர் டேய்ஸ்' படம் தான். அந்தவகையில் இப்போது தான் இயக்கவுள்ள 'மணியறையில் ஜின்னு' என்கிற படத்தில் திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கியிருக்கும் நஸ்ரியாவை அழைத்து வந்து, அவரது கணவர் பஹத் பாசிலுக்கே ஜோடியாக்கிய பெருமையையும் அன்வர் ரஷீதே தட்டிச்செல்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in