டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினிகாந்த் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. 1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி ரஜினிகாந்த் அறிமுகமான 'அபூர்வ ராகங்கள்' படம் திரைக்கு வந்தது. இந்த 40 வருட காலத்தில் ரஜினிகாந்த் என்ற நடிகர் தமிழ்த் திரையுலகில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகிலும் புரிந்த சாதனைகள் நிறைய உண்டு. அறிமுகமாகி 40 ஆண்டு காலம் ஆனாலும் இன்னும் புகழின் உச்சியில் இருக்கும் ரஜினிகாந்தின் சாதனைகளை அவருடைய ரசிகர்கள் கடந்த சில நாட்களாக கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையிலும், அதற்கடுத்து ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்திலும் ரஜினி நடிக்க உள்ள நிலையிலும் அவருடைய ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் அந்த இரண்டு படங்களும் அமையும் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தென்னிந்தியத் திரையுலகில் வசூல் மன்னனாகவும் விளங்கி வரும் ரஜினிகாந்திற்கான ரசிகர் மன்றங்களும் ரசிகர்களின் எண்ணிக்கையும் 80களில் அவர் எப்படி வைத்திருந்தாரோ இன்னும் அதே அளவிற்கு உள்ளது. மேலும் இன்றைய தலைமுறையினரும் அவரை ரசிக்கும் அளவிற்கு உள்ளனர். ரஜினி படம் வெளிவந்தாலே தியேட்டர்களில் திருவிழாக் கோலம்தான் என்பது கடைசியாக வெளிவந்த 'லிங்கா' படம் வரை இருந்து வருகிறது.
சமூக வலைத்தளங்களிலும், ரஜினியைப் பற்றிய பல விதமான தகவல்கள், மீமீக்கள் மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.