இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அதர்வா, கவுதம் கார்த்திக் ஆகியோருக்கு பிறகு அடுத்து சினிமாவுக்கு வர இருக்கும் புதிய இளம் வாரிசு அனேகமாக விக்ரம் மகன் துருவாகத்தான் இருக்கும். ஒசைப்படாமல் சினிமாவுக்குரிய அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார். மகன் நிறைய படிக்க வேண்டும் என்று விரும்பிய விக்ரம், துருவ் கவனம் சினிமாவின் பக்கம் இருப்பதை உணர்ந்து நடிக்க ஓகே சொல்லிவிட்டார். இப்போது துருவ் நடிப்பு, நடனம், சண்டை, குதிரையேற்றம், போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
டப்ஸ்மாஷ் என்ற புதிய தொழில்நுட்பம் வந்த பிறகு அதை பயன்படுத்தி துருவ் ஒரு குறும்படம் தயாரித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ், தெலுங்கு மொழி படங்களில் உள்ள காட்சிகளை தேர்வு செய்து அந்த காட்சிகளுக்கேற்ப தானே டப் செய்து நடித்து அதனை ஒரு குறும்படமாக உருவாக்கி இருக்கிறார். சினிமா இண்டஸ்ட்ரியில் இதுதான் இப்போது ஹாட் டாபிக். தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க அதனை துருவ் இணையளத்தில் வெளியிட வில்லை. மணிரத்னம், ஷங்கர் இருவரில் ஒருவர்தான் துருவை அறிமுகப்படுத்தப்போகிறார்கள் என்கிறார்கள்.